தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரி க்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஜூலை, 2025

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரி க்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

 தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜுலை 15 -

 வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்க நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஓய்வூதியர்களை ஒன்றிய அரசின் ஊதிய குழுவின் பரிந்துரை களில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோ தா வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்ய வும் நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டு ள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று 15.07.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் எம் பன்னீர்செல்வம் தலை மை தாங்கினார் மாவட்ட பொருளாளர் பி ஞானசேகரன் வரவேற்று பேசினார்.  மாவட்ட செயலாளர் பா.ரவி கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஓய்வூதியர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் பி. லோகநாதன் தபால் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ கதிர் அகமது அகில இந்திய ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் சி ஞானசேகரன் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்ட அமைப்பாளர் செ. நா.ஜனார்த்தனன் ஆகியோர் வாழ் த்தி பேசினர். அகில இந்திய துணைத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு ரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சா.ஜெயச்சந்திர பாக்யராஜ் நன்றி கூறினார். 

 கோரிக்கைகள்
1. ஊதிய குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா வேலிடேசன் சட்டத்தை ரத்து செய்க 
2. நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்க 
3. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்க ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி தந்திட நிதி மேலாளருக்கு ஆணை வழங்கிடுக 
4. 1995 ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடுக 
5. மாநில அரசுகள் உடனடியாக ஊதிய குழுக்களை அமைத்திட வேண்டும் மத்திய அரசின் எட்டாவது ஊதியக்குழுவின் பயன்களை ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் வழங்கிடுக ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஊதியமாற்றம் ஓய்வூதிய மாற்றம் உயர்த்தி வழங்கிட வேண்டும் 
6. மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி 55 விழுக்காட்டை அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக வழங்க வேண்டும்
7. மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாநில அரசுகளே நடத்த வேண்டும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஓய்வூதியர்களுக்கும் இலவச மருத்துவம் வழங்க வேண்டும் 
8. தொடர் வண்டியிலும் அதாவது ரயில் வண்டிகளிலும் வானூர்திலும் விமானத்திலும் மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை வழங்கிடுக 
9. ஓய்வூதியம் தொகுத்துப் பெற்ற கம்யூட்டேஷன் திரும்ப செலுத்தும் காலத்தை 11 ஆண்டுகளாக குறைத்திடுக

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad