மறைந்த முதல்வர் கலைஞரை அவமதிக்கும் வகையில் அலட்சியமாக பதில் அளித்த அமைச்சர் ஆர் காந்தி!
ஆற்காடு , ஜுலை 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு
அடுத்த வேப்பூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது திமுகவினர் அதிருப்தி மாவட்ட நிர்வாகி கள் முகம் சுழிப்பு சேலம் பகுதியில் கலை ஞர் சிலை மீது கருப்பு
மை வீசப்பட்டு இருக்கும் சம்பவம் குறித்து கேட்ட கேள் விக்கு ஏதாவது நல்லதை கேளுங்கள் கலைஞர் சிலை மீது கருப்பு மை வீசியது ஒரு கேள்வியா ஊரில் இல்லாதவை குறித்து கேளுங்கள் அவன் இதை செய்தான் அதை செய்தான் என கேட்க வேண்டாம் என மறைந்த முதல்வர் கலைஞரை அவமதிக்கும் வகையில் அமைச்சர் ஆர் காந்தி அலட்சி யமாக பதில் அளித்தார் மக்கள் சார்ந்த குறை கள் மற்றும் தேவைகளை குறித்து மட்டும் கேளுங்கள் அரசு அதிகாரியிடம் சொல்லி செய்கிறேன் என பேசி நழுவி னர் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில்உங்களு டன் ஸ்டாலின் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்று நிகழ்ச் சியை தொடங்கி வைத்தார் பின்பு நடைபெற்ற முகாம் நிகழ்ச்சியை ஆய்வு செய்த அமைச்சர் ஆர் காந்தி இறுதியாக செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்
அப்போது அமைச்சர் காந்தி தெரிவித்த தாவது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தேர்தலுக்காக தொடங்கப்பட்டு இருப்ப தாக முன்ன்னால் அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்த கருத்துக்கு நான்கு ஆண்டுகால திமுக அரசு திட்டங்கள் தேர்தலுக்காக நடத்தவில்லை தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை மட்டும் இன்றி இல்லம் தேடிக் கல்வி மக்களுடன் முதல்வர் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறதுமக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் விடுபட்ட நபர்கள் பயன்பெறு வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவித் தார் தேர்தலுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமல்ல தற்போது அதிமுக கட்சி மே ற்கொண்டு வரும் தமிழகத்தை மீட்போம் என்ற பயணம் தேர்தலுக்காக நடைபெறு வதாக மறைமுகமாக சுட்டி காட்டி அது ஒன்றிற்கும் உதவாது என விமர்சித்தார்
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் நடந்திருப்பவை என்னவென்று அதற்கு முன்பு அதிமுக ஆட்சியில் நடந்தவை என்ன என்றும் ஒப்பிட்டு சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினர் சேலம் பகுதியில் கலைஞர் சிலை மீது கருப்பு மை வீசப் பட்டு இருக்கும் சம்பவம் குறித்து கேட்ட கேள்விக்கு ஏதாவது நல்லதை கேளுங் கள் கலைஞர் சிலை மீது கருப்பு மை வீசியது ஒரு கேள்வியா ஊரில் இல்லாத வை குறித்து கேளுங்கள் அவன் இதை செய்தான் அதை செய்தான் என கேட்க வேண்டாம் என மறைந்த முதல்வர் கலைஞரை அவமதிக்கும் வகையில் அலட்சியமாக பதில் அளித்தார்
மக்கள் சார்ந்த குறைகள் மற்றும் தேவைகளை குறித்து மட்டும் கேளுங்கள் அரசு அதிகாரியிடம் சொல்லி செய்கிறேன் என பேசி நழுவினர்
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் (9150223444)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக