தூத்துக்குடி மாவட்டம் - உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறும் இடம் குறித்த தகவல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

தூத்துக்குடி மாவட்டம் - உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடைபெறும் இடம் குறித்த தகவல்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி, கயத்தார், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், ஏரல், திருவைகுண்டம், சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடுகளை தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
            
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 23 தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் 15,16,17 ஆகிய வார்டுளுக்கு P&T காலனியில் உள்ள 1-லியோ பள்ளியில் வைத்தும், 

காயல்பட்டினம் நகராட்சியில் 15,16,18 ஆகிய வார்டுளுக்கு ஆயிஷா சித்திகா பெண்கள் கல்லூரியில் வைத்தும், பெருங்குளம் பேரூராட்சி பகுதியில் யாத்திரிகர்கள் தங்கும் விடுதியில் வைத்தும், 

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் ஆண்டனி திருமண மண்டபத்தில் வைத்தும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் குளத்தூர் கிராமத்தில் உள்ள குளத்தூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் வைத்தும், 

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வாகைகுளம் கிராமத்தில் உள்ள ராஜலட்சுமி மஹாலில் வைத்தும் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம் நடைபெற உள்ளது
             
24 ஆம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 18,33 மற்றும் 34 ஆகிய வார்டுளுக்கு மில்லர்புரத்தில் உள்ள BMC உயர்நிலைப் பள்ளியில் வைத்தும், கோவில்பட்டி நகராட்சியில் 33 மற்றும் 34 ஆகிய வார்டுளுக்கு வக்கீல் தெருவில் உள்ள நந்தினி மஹாலில் வைத்தும், சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் நடுவக்குறிச்சி, செல்வசுமங்கலி மஹாலில் வைத்தும், திருவைகுண்டம் பேரூராட்சி பகுதியில் உள்ள செட்டியார் திருமணமஹாலில் வைத்தும், புதூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அழகாபுரியில் உள்ள v.பாண்டிநாடார்-காளியம்மாள் திருமண மண்டபத்தில் வைத்தும், உடன்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் கலையரங்கத்தில் வைத்தும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது 
                
25 ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சியில் 19, 30, 31 மற்றும் 32 ஆகிய வார்டுளுக்கு டூவிபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வைத்தும், திருச்செந்தூர் நகராட்சியில் 15,16,17 ஆகிய வார்டுளுக்கு திருநாவுக்கரசு மடத்தில் வைத்தும், தென்திருப்பேரை பேரூராட்சியில் தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடத்தில் வைத்தும், உடன்குடி பேரூராட்சியில் உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடத்தில் வைத்தும், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில்  பழையகாயலில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளியில் வைத்தும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்  கடலையூர் சாலையில் உள்ள மகிழ்ச்சி அரங்கத்தில் வைத்தும் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம் நடைபெற உள்ளது. 

பொதுமக்களின் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் நேரில் சென்று. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பங்கள் மற்றும் மடிப்பேடு வழங்கி, 15 அரசு துறைகள் வாயிலாக வழங்கப்படும் 46 சேவைகள் குறித்தும், பொதுமக்களிடையே விளக்கி கூறினர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 14 நாட்களில் 1,63,702 விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad