எடப்பாடியாரின் வருகையையொட்டி மானாமதுரையில் களைகட்டும் விளம்பரப் பலகை பணிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

எடப்பாடியாரின் வருகையையொட்டி மானாமதுரையில் களைகட்டும் விளம்பரப் பலகை பணிகள்.


எடப்பாடியாரின் வருகையையொட்டி மானாமதுரையில் களைகட்டும் விளம்பரப் பலகை பணிகள். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி முதற்கட்ட சுற்றுப்பயணமாக ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான திரு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வருகையையொட்டி, மானாமதுரை பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான திரு பி. ஆர். செந்தில்நாதன் அவர்கள் பார்வையிட்டார். அதன் ஒரு பகுதியாக மானாமதுரை பகுதியில் உள்ள ஆட்டோக்களில் ஆஇஅதிமுக சார்பாக கழக வழக்கறிஞர் மனம்பாக்கி இரா. சுரேஷ்பாபு அவர்களால் அமைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை செந்தில்நாதன் அவர்கள் பார்வையிட்டார். மேலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், கட்டவுட் பேனர்கள் நிறுவும் பணிகள் குறித்தும், கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பு குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய செயலாளர் எஸ். குணசேகரன், ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளர் விஜி போஸ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏசி மாரிமுத்து மற்றும் ஆஇஅதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad