ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகம்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் சேஷ்டாபிஷேகம். 

 ஸ்ரீவைகுண்டம் ஜுலை.9. நவதிருப்பதி களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நேற்று சேஷ்டாபிஷேகம் நடந்தது. 

ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளன்று உற்சவர் கள்ளப்பிரான் சுவாமியின் கவசங்கள் படிகளையப் பெற்று பொற்கொல்லர் களால் அறநிலையத்துறையின் துணை ஆணையர் (சரிபார்ப்பு) அதிகாரிகள் முன்னிலையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 6.30 மணிக்கு திருமஞ்சனம். 7 மணிக்கு தீபாராதனை. நித்தியல் கோஷ்டி நடந்தது. 

9 மணிக்கு உற்சவரின் கவசங்கள் படிகளையப் பெற்று அதிகாரிகள். அறங்காவலர்கள். மற்றும் ஸ்தலத்தார்கள் முன்பு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. பின்னர் அர்ச்சகர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு கவசங்கள் சாத்தப்பட்டது. 

7.30 மணிக்கு மூலவர் பிரகாரத்தில் உற்சவர் கள்ளப்பிரான் நடைபாவாடை விரிக்கப்பட்டு கைத்தலத்தில் கர்ப்பகிரகத்திற்குள் எழுந்தருளினார். தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் நவதிருப்பதி கோவிலில் ஆழ்வார்திருநகரி. கோவிலும் நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு நாராயணன். ராமானுஜம். சீனு ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். ரங்கன் தேவராஜன் திருவேங்கடத்.தான். கண்ணன். ஸ்ரீவேங்கட கிருஷ்ணன். வெங்கடேசன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. 

மாரியம்மாள். சண்முகசுந்தரம் முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் . ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad