பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவி லியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப் பாட்டம்!
ராணிப்பேட்டை , ஜுலை 1
ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசுகிராம சுகாதார செவிலியர் பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் இருதய மேரி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் நிர்மலா மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி மாவட்ட பிரச்சார செயலா ளர் திலகவதி, பிரச்சார செயலாளர் ஷெல்லா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சி சர்மிளா ஜாய்ஸ்,ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார் கள்.
1, துணை சுகாதார மையங்களில் MLHP மணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும்.
2, துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்களான MLHP களை தடுப்பூசி பணியில்
ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.
3, கொரோனா லாக் டவுன் காலத்தில் போக்குவரத்தும் இல்லாத சூழலில் ஒவ்வொரு நாளும் ரூ, 500 முதல் ஆயிரம் வரை சொந்த ஊதியத்தில் இருந்து செலவு செய்து கிராம சுகாதார செவிலியர்களும் பகுதி சுகாதார செவிலியர்களும் பனிக்களத்திற்கு சென்றனர், இரவு பகல் பாராது ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் கூட விடுமுறை இன்றி கொரோனா தடுப்பூசி பணி உட்பட அனைத்து கொரோனா பணியிலும் ஈடுபட்டோம். பெண் ஊழியர்கள் என்ப தால் அதிக பணிச்சுமை பிற பணியாளர் களின் பணியை திணிப்பது, மெமோ, சஸ்பென்ஷன், என்று அச்சுறுத்தல் போன்ற பாலியல் பாகுபாட்டை கைவிட வேண்டும். போன்ற 17 கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக