பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் பயிற்சி வகுப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பயிலும் மாணவர்களுக்கு ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் மூலம் செயல்முறை விண்வெளி அறிவியல் வகுப்பு நடத்தப்பட்டது.
இவ்வகுப்பின் தொடக்கத்தில், நவீன தொலைநோக்கி மூலம் மாணவர்கள் சூரியன் மற்றும் அவற்றில் தோன்றும் கரும்புள்ளிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தா.கலைச்செல்வன், பெருவெடிப்பு கோட்பாடுகள், பால்வெளிகள், நட்சத்திரங்கள், சூரியன், கோள்கள் மற்றும் பூமி உருவாக்கம், உயிரினத் தோற்றம் மற்றும் மனித பரிணாம வளர்ச்சி போன்ற தலைப்புகளில் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் சி.மாரிமுத்து தலைமை வகித்தார். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் கே.சோழபாண்டியன் வரவேற்றார்.
இந்நிகழ்வில், அறிவியல் ஆசிரியர் சத்தியநாதன், கல்விச் செயல்பாட்டாளர்கள் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், த.பழனிவேல், கார்த்திக், ஹரிஹரசுதன், மற்றும் அறிவியல் மன்ற உறுப்பினர் பி.அகிலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி த.நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக