மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவர்களின் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவர்களின் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் தேசிய மருத்துவர்களின் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமையன்று தேசிய மருத்துவர்களின் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவர்கள் இதில் உற்சாகமாக பங்கேற்றனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் பள்ளி முதல்வர் திருமதி எம். சாரதா அவர்கள் மருத்துவர்களின் சேவையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி, அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். மாணவர்கள் மருத்துவத்துறையின் பணியைப் பாராட்டும் வகையில் பேச்சுப் போட்டி, கவிதை வாசிப்பு போன்றவற்றில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 


பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள அனைத்து மருத்துவமனைக்கும் நேரில் சென்று மருத்துவர்களிடம் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினர். மாணவர்களிடையே ஆரோக்கியம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் சார்பில் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 


இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி அவர்கள் மாணவர்களின் செயலை பாராட்டி ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சி பள்ளி மாணவர்களின் மனதில் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு சேவையைப் பற்றிய நன்மதிப்பை மெருகேற்றியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad