ஆசிரியர்கள் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும்! பொதுக்கூட்ட த்தில் த.வா.க.தலைவர் தி.வேல்முருகன் பேச்சு !!
குடியாத்தம் , ஜுலை 22 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம், நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சி தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் கலந்துகொண்டு பேசும்போது நிரந்தர பணி வேண்டி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியிலும் ஆசிரியர்க ளின் பணி நிரந்தரம் ஆக்குவதாக வாக்குறுதி தந்தார்கள் ஆனால் நிதி நிலைமை காரணமாக 2000 பேருக்கு மட்டுமே ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 22, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது நிரந்தர பணிகேட்டுபோராட் டம் நடத்தி வருகிறார் கள் உடனடியாக முதல்வர் மற் றும் கல்வி அமைச்சர் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக் கின்றேன். இதே போல் குழந்தைகளை கடத்துவது, பாலியல் வன்கொடுமைக ளில் ஈடுபடுவது போன்ற கொடுமையான செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய் யப்பட்டால் அவர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் பிணை வழங்கக் கூடாது அவர்களுக்கு வழக்கறிஞர் கள் யாரும் ஆஜராக கூடாது அவர்களுக்கு கடுமை யான தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே இது போன்ற கொடுமையை தடுக்க முடியும் கவன ஈர்ப்பு பெறும் வழக்குகளில் மட்டுமே விசாரணை விரைவாக நடைபெ றுகிறது அது போல் இல்லாமல் அனைத்து குற்றங்களையும் விரைவாக விசாரணை நடத்தி தண்ட னை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட பொறுப்பாளர் சுதாகர், நெப்போலியன், இர்ஷாத் அலி மேற்கு மாவட்ட செயலாளர் வ. வினோத் கண்ணா, அணைக்கட்டு மகளிர் அணி ஒன்றியச்செயலாளர் வேண்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக