வரதட்சணை கேட்டு மனைவியை மாடி யில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி - கணவன் அதிரடி கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

வரதட்சணை கேட்டு மனைவியை மாடி யில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி - கணவன் அதிரடி கைது!

வரதட்சணை கேட்டு மனைவியை மாடி யில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயற்சி - கணவன் அதிரடி கைது!
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி யை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகள் நர்கீஸ் (வயது 21) என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தமிழ்நாடு காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபா என்பவரின் மகன் காஜாரபீக் ஆகிய இருவருக்கும் 2023-ல் திருமணம் நடந்துள்ளது.இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த 03. 06. 2025 அன்று பெற்றோர் தூண்டுதலின் பேரில் கணவர் காஜாரபீக், நர்கீஸை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை முயற்சி ஈடுபட்டதாகும் இதனால் தனது இடுப்பு, வலது, இடது கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை ஈடுபட்டு வருவதால் தன்னை வரதட்சனை கேட்டு கொடுமை செய்த தனது கணவர் காஜாரபிக் மற்றும் தமிழ்நாடு காவல் துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் மாமனார் பாபா ஆகி யோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆம்புலென் ஸில் வந்து நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் புகார் அளித்தார்.இதனையடுத்து அரியூர் காவல் துறையினர் கொலை முயற்சி, வரதட்சணை கொடுமை, பெண் வன்கொ டுமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெண்ணிண் கணவர் காஜாரபீக் (வயது 30) என்பவரை கைது செய்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad