நாமக்கல்லில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் முதல் பரிசு வென்ற மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மாணவன். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஜூலை, 2025

நாமக்கல்லில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் முதல் பரிசு வென்ற மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மாணவன்.


நாமக்கல்லில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் முதல் பரிசு வென்ற மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மாணவன். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் ந. நித்தின் மெசி என்ற மாணவன் நாமக்கல் மாவட்டம் செல்வம் கல்லூரியில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றுள்ளார். முதல் பரிசு பெற்ற மாணவன் நித்தினை பாபா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்து, வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி மற்றும் முதல்வர் திருமதி மு. சாரதா ஆகியோர் உடன் இருந்தனர். வில்வித்தையில் போட்டியில் முதல் பரிசு பெற்று பள்ளிக்கும் மானாமதுரைக்கும் பெருமை சேர்த்த மாணவன் நித்தின் மெசியை பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad