ஈரோடு மாவட்டத்தில் பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற குற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல் துறை சார்பில் 'போலீஸ் அக்கா' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்பி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்பி சுஜாதா இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் பணியாற்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், 2 மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளுக்குச் சென்று 'போலீஸ் அக்கா' திட்டம் குறித்து இவர்கள் விளக்கமளிப்பர்.
இதன்மூலம் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கான வழிகாட்டுதல், உதவிகளை வழங்கவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கும், பெண் போலீஸாருக்கும் எஸ்பி சுஜாதா அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள
செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக