ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக் கரைப்பகுதியில் சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் யாக பூஜை நேற்று நடைபெற்றது. ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் இந்த யாக பூஜையானது, உலக நன்மை வேண்டியும், அனைத்து ஜீவராசிகள் நலத்துடன் வாழ வேண்டியும் யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சோழீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் சிலைக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் கலசாபிஷேகத்துடன் சிறப்பு அலங்காரத்தோடு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
செ.கோபால், ஈரோடு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக