கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் அரசு சார்ந்த வேலைகளை ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் 17-07-2025 வியாழன் கிழமை மதிப்பிற்குரிய மாவட்ட திட்ட இயக்குனர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் ரங்கப்பனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் இலவச கலைஞர் கனவு இல்லத் திட்ட வீடுகள், முதலமைச்சரின் மறு கட்டமைப்பு வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை, மற்றும் புதிய பள்ளி கட்டிடங்கள் மற்றும் 100 நாள் வேலைத்திட்டம், சிமெண்ட் சாலை அமைக்கும் பணி என அரசு சார்ந்து நடைபெறும் அனைத்து பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி R.M.S.K #அர்ச்சனா_காமராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ராதாகிருஷ்ணன், கிராம ஊராட்சி ஒன்றிய பொறியாளர் திரு.அரிகிருஷ்ணன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. பிரியதர்ஷினி மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திரு. நேரு மற்றும் துறை அதிகாரிகள் மற்றும் ரிஷி கன்ஸ்ட்ரக்ஷன் ஒப்பந்ததாரர் ,எஸ். அருணகிரி மற்றும் ஊராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள், ஊராட்சி செயலர் திரு. ஜெ.மணிமாறன் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக