மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலரும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்செந்தூருக்கு வருகை தர உள்ளார்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் ஆலோசனையின் படி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி, உடன்குடி ஒன்றிய நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே. விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் திருச்செந்தூர் பிரசாரத்தில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , பூத் கமிட்டி, இளைஞர்கள், கிளைக் கழக செயலாளர்கள் உட்பட தொண்டர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு உற்சாகத்துடன் வரவேற்க வேண்டும் என விஜயகுமார் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, அமிர்தா எஸ்.மகேந்திரன், உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய விவசாய செயலாளர் கல்லாமொழி ராஜதுரை,
ஒன்றிய இளைஞரணி பொருளாளர் செட்டியாபத்து ராம்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கந்தன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக