அரிமண்டபம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து நடைபெறவுள்ள 'சமூக சமத்துவ' மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த ஜான் பாண்டியன்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் திரு பெ. ஜான் பாண்டியன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த அரிமண்டபம் கிராமத்திற்கு வருகைபுரிந்து பொதுமக்களை சந்தித்தார். திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள 'சமூக சமத்துவ' மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு இந்த சந்திப்பின் மூலமாக அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினையும் பாண்டியன் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மா. வீ. முத்து, மானாமதுரை ஒன்றிய துணை செயலாளர் கரு. பகத்சிங், ச. மோகன், தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக