கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேஉள்ளது அகர ஆலம்பாடி கிராமத்திற்கு உட்பட்ட பெரிய ஏரி.இந்த ஏரியை ஆக்கிரமித்து அதில் குப்பை தரம் பிரிக்கும் சேமிப்புக் கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இது கட்டப்படும் போதே ஏரியை ஆக்கிரமித்து கட்ட வேண்டாம் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேகோரிக்கை வைத்து இதைநிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனாலும் யாரும் அதை பொருட்படுத்தாமல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அது எதற்கும் பயனற்று ஏரியின் ஆக்கிரமிப்பாக மட்டுமே உள்ளது. இந்தகுப்பை தரம் பிரிக்கும் சேமிப்புக் கிடங்கை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் மேலும் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரினால் இப்பகுதியின் நீர்வளம் மேம்படும் என அகர ஆலம்பாடிகிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக