பேரணாம்பட்டு நகராட்சியில் உங்களிடம் ஸ்டாலின் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

பேரணாம்பட்டு நகராட்சியில் உங்களிடம் ஸ்டாலின் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

பேரணாம்பட்டு நகராட்சியில் உங்களிடம் ஸ்டாலின் முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
பேரணாம்பட்டு, ஜுலை 12 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரா ட்சியில் உங்களிடம் ஸ்டாலின் முகாம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற் கொண்டார், வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு நகராட்சி 21 வார்டு கொண்ட நகராட் சியாகும் இந்த நகராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்
முகாம் குறித்து வருகின்ற 16,17,24,25 ம் தேதிகளில் நடைப்பெறவுள்ளது. இதற்கான பணிகள் நகராட்சியின் சார்பில் வீடு வீடாக விண்ணப்பம் மற்றும் கையேடு பணிகளை தன்னார்வலர் களை  வைத்து தீவிரமாக வழங்கி வருகிறது இந்நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி நேற்று திடீரெ ன்று நகராட்சி பகுதிகளான முகமது அலி 2 வது வீதி ஜாமியா போன்ற வீதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி களில் உள்ள பொது மக்களிடையே நிறை குறைகளை கேட்டறிந்து பார்வையிட்டார் இந்த ஆய்வின் போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் பேரணாம்பட்டு நகர மன்ற துணை தலைவரும் திமுக நகர செயலாளருமான ஆலியார் ஜுபேர் அஹ்மத் குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி நகராட்சி ஆணையாளர் வேலவன் பேரணாம்பட்டு நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் 
மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad