காட்பாடி ரெட்கிராஸ், ஜாய்ஸ் கல்லூரி சார்பில் இரத்த தான முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

காட்பாடி ரெட்கிராஸ், ஜாய்ஸ் கல்லூரி சார்பில் இரத்த தான முகாம்!

காட்பாடி ரெட்கிராஸ், ஜாய்ஸ் கல்லூரி சார்பில் இரத்த தான முகாம்!
    
காட்பாடி , ஜுலை 16
        
வேலூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், காட்பாடி ஜாய்ஸ் காலேஜ் வேலூர் ரத்த மையம்  மற்றும் அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து ரத்த தான முகாமும் இலவச பொது மருத்துவ முகாமும் இன்று காட்பாடி ஜாய்ஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமினை வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார்தொடக்கி வைத்தார். விழாவிற்கு காட்பாடி ரெட் கிராஸ் அவைத்தலைவர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்  காட்பாடி ஜாய்ஸ் கல்லூரியின் தாளாளர் எஸ்.பென்னிஹியின் வரவேற்று பேசி னார். ரெட் கிராஸ் அவை துணைத் தலை வர் ஆர்.விஜயகுமாரி ஒய்.ஆர்.சி குழுத் தலைவர் எஸ்.ரமேஷ்குமார்ஜெயின், நவநீதம் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர்.சத்யானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம் சுனில் குமார் ரத்த தான முகாமையும் இலவச பொது மருத்துவ முகாமையும் துவக்கி வைத்து ரத்த தானம் செய்த வர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கியும் மேலும் அதிக முறை ரத்ததானம் செய்த ஐந்து மாணவர் களுக்கு ரத்ததான இலச்சினை வழங்கி  பேசினார் அவர் கூறியதாவது சிறந்த தானம் ரத்ததானம் மாணவர்கள் ரத்த தானம் செய்ய முன்வந் திருப்பது பாராட்டுக்குரியது நாம் ரத்த தானம் செய்வோம் பல உயிர்களை காப் போம் என்றார் இந்த முகாமில் அகர்வால் கண் மருத்துவமனையின் சார்பில் இலவச கண் பரிசோதனைகளும் செய்ய ப்பட்டன  200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனையும் கண் பரிசோ தனைகளையும் செய்து கொண்டனர் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ரத்த தானம் செய்தனர்.  பணியாளர்கள் பி.வசந்தி, மாலதி, ஸ்வேதா, பிரியா, மஞ்சுளா, எலிசபெத், மற்றும் புளோரா ஆகியோர் உள்பட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். முடிவில் வேலூர் ரத்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே சிவன் நன்றி கூறினார்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad