வயது மூப்பின் காரணமாக இயற்கை எழுதிய முதியவரின் கண்கள் தானம்!
குடியாத்தம் , ஜுலை 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன், கஸ்பா, கெளதமபேட்டையை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் பணி யாற்றி ஓய்வு பெற்ற கே. முருகேசன் (வயது 63) இயற்கை எய்தினார். அன்னா ரது மனைவி ராஜகுமாரியின் ஒப்புதல் பேரில் அவரது கண்கள் வேலூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது அன்னாரின் மறைவிற்கு குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிப்பதோடு, கண்கள் தானம் செய்த குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இது குறித்து முதல் தகவல் சங்க உறுப் பினர் மதியழகன் தந்தார். சங்க உறுப் பினர்கள் சிவராஜ், பிரேம் ஆகியோர் உடனிருந்து உதவினர். கண்தான ஏற்பாடுகளை சங்க கண்-உடல்தானக் குழு தலைவர் எம்.ஆர்.மணி செய்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக