தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜுலை 3 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முழுவதும் நிர்வாகம் மாறுதல் என்ற பெயரில் நடைபெறும் முறைகேடான மாறுதலை கண்டித்தும், பதவி உயர்வின்றி நடைபெறும் பெயரளவிலான மாறுதல் கலந்தாய்வு உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும்... பதவி உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வுடன் கூடிய மாறுதல் கலந்தாய்வு நடத்திட வலியுறுத்தியும்தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலம் தழுவிய அளவிலான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ளஆஞ்ச நேயர் கோவில் அருகில் 03.07.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணியள வில் நடைபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட நிர்வாகி ஆர் அந்தோணி சாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ்.சபீதா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் ஆ.செல்வம் வரவேற்று பேசிஉறுப்பி மாவட்ட செயலாளர் ஆ.ஜோசப் அன்னையா கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ் சிறப்புரையாற் றினார்.தோழமை சங்க நிர்வாகிகள் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்த்லைவர் செ.நா.ஜனார்த்தனன் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் அ.சேகர் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
முடிவில் அணைக்கட்டு வட்டார செயலாளர் எம்.தினேஷ்குமார் நன்றி கூறினார்.
கோரிக்கைகள்
1.தொடக்கக்கல்வித்துறையில் கண்துடைப்பாக 2025-26ஆம் கல்விஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக, சட்ட விரோதமாக மாறுதல் ஆணையினை நாள்தோறும் வழங்கி வரும் தொடக்கக்கல்வித்துறையினை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்நாடு அரசே விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடு.
2.தொடக்கக்கல்வித் துறையில் 2025-26ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வின்றி நடைபெறும் பெயரளவிலான மாறுதல் கலந்தாய்வு உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்திகின்றோம். பதவி உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வுடன் கூடிய மாறுதல் கலந்தாய்வை நடத்திட கோருகின்றோம்.
3.தொடக்கக்கல்வித்துறையில் 2025-26ஆம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விதிகளின் படி பணிநீட்டிப்பு ஆணை வழங்கிடுக
என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக