காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் – மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டு!
வேலூர் , ஜுலை 3 -
வேலூர் மாவட்டம் இந்தியாவில் ஒவ் வொரு ஆண்டும் ஜுலை மாதம் வரலா ற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதல மைச்சருமான மருத்துவர் பிதான்சந்திர ராய் அவர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படு கிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கி ராஸ் சங்கம் சார்பில் தேசிய மருத்துவர் தினம் வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 02.07.2025 பிற்பகல் நடை பெற்றது நிகழ்வுக்கு காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். மாவட்ட மேலாண் மைக்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் வரவேற்று பேசினார். யூத்ரெட்கிராஸ் குழு தலைவர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின் முன்னிலை வகித்தனர்.மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி சங்கத்தின் சார் பில் வட்டார மருத்துவ அலுவலர் எம்.ராணிநிர்மலா, பொது மருத்துவர்கள் பிரியா, மலர்விழி, நிகில்பிரசன்னா, பல்மருத்துவர் சிந்துஜா, ஆகிய ஐந்து பேருக்கு அவைத்தலைவர் செ.நா.ஜனார் த்தனன், விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது சமூகம் மற்றும் தனி மனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக் கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதம் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாட கின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில்கொண்டாடப் படுகிறது. மனித சமூகத்திற்கு செய்து வரும் மருத்துவர்களின் சேவையினை மனதார பாராட்டுகின்றோம் என்றர்.
அலுவலக கண்காணிப்பாளர் ஜீவா, செவிலியர்கள் சி.பி.உமாராணி,
டி.ஜான்சி, இ.மாதவி, எ.மாலதி, ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
வட்டார சுகாதார செவிலியர் இ.மாதவி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக