முன்னாள் ராணுவத்தினர் பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்று கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜுலை 23 -
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை திருப் பத்தூர் திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலம் ஆகிய அனைத்து முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே, தில்லி ஜந்தர் மந்தரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நல் உள்ளங்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் நின்று குரல் கொடுக்கும் பென்ஷன் ஃபேமிலி பென்ஷன் முறைப்படுத்தி ஸ்பர்ஸ் நீக்க வேண்டி ஆர்ப்பாட்டம் அனைத்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க நிர்வாகி செல்வமூர்த்தி, ஒருங்கி ணைப்பாளர் ஐடிவிவிஓ குடியாத்தம் கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார் ஆகி யோர் தலைமையிலும், சாரங்கன், ஜம்புலிங்கம், மாவட்ட பொருளாளர் கனிமொழியன், நீலகண்ட ரெட்டி, அனை த்து ராணுவ வீரர்கள் சங்க மாநில உழை ப்பாளர் சிவகுமார், முன்னாள் ராணுவ வீரரும், சமூக ஆர்வலருமான (சித்தூர்) மிலிட்டரி. ராஜேந்திரன், சித்தூர் தம்பி குரூப்ஸ் முன்னாள் ராணுவ வீரர்கள் வரதராஜன், ஆர். கணேசன், ஆகியோர் முன்னிலையிலும் இந்த மாபெரும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் தில் பத்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் டெல்லி யிலும் பல்வேறு மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்ட மானது நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் தில் முன்னாள் ராணுவ வீரர் முப்படை நல சங்கம் சாத்துமதுரை கேப்டன் மன்னார்சாமி, ஏழுமலை, புண்ணிய கோட்டி, குருப், அணைக்கட்டு ஒன்றிய பொறுப்பாளர் வேலாயுதம், ஸ்ரீ இன்ஜினி யரிங் வேலூர் மாவட்ட ராணுவ வீரர்கள் சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் அண்டை மாநிலம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப் பாட்டம் வெற்றி அடைய கோரிக்கைகளை நிறைவேற்ற கோஷங்களை எழுப்பி பதாகைகளை கையில் ஏந்தி பேனர்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக