நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்காவுக்கு உட்பட்ட எருமாடு கப்பாளா அரசு உண்டு உறவிடம் பள்ளியில் பழங்குடியர் மக்களுக்கு ஜாதி சான்றிதல், வருமான சான்றிதல், இருப்பிடம் மற்றும் குடும்ப அட்டை சரிபார்த்தல் அத்துடன் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டன. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதார் அட்டை சரிபார்த்தல் மட்டும் நடைபெறவில்லை இதனால் 100 க்கு மேற்பட்டோர் திருப்பி அனுப்பபட்டனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இக்குறைகளை நிவர்த்தி செய்து தாருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக