ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் வஸந்த உற்சவம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் வஸந்த உற்சவம்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் வஸந்த உற்சவம்

ஸ்ரீவைகுண்டம் ஜீலை 5 ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பத்து நாட்கள் வரை வஸந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டும் ஜூன் 28 ந்தேதி தொடங்கி கடந்த 6 நாட்களாக வஸந்த உற்சவம் நடக்கிறது. காலை 7 மணிக்கு நாலாயிர திவ்யப்பிரபந்தம். 10.30 மணிக்கு தீர்த்தம் சடாரி கோஷ்டி நடந்தது. 

மாலையில் 5 மணிக்கு சாயரட்சை. 6 மணிக்கு தோளிக்கினியானில் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக கள்ளப்பிரான் சுவாமி புறப்பாடு. சுற்றி தண்ணீர் நிறறைக்கப்பட்ட நீராழி வஸந்த மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை. 

அத்யாபகர்கள் சீனிவாசன் பார்த்தசாரதி சீனிவாச தாத்தம் வைகுண்ட ராமன் ஆகியோர் நாலாயிர திவ்யப்பிரபந்தம் சேவித்தனர் 

தீர்த்தம் சடாரி கோஷ்டி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 8.30 மணிக்கு சுவாமி முலஸ்தானத்திற்கு எழுந்தருளினார். 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு. நாராயணன். ராமானுஜம். சீனு. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி சீனிவாசன் தேவராஜன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். ஆய்வாளர் நம்பி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad