ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் பவானி முதல் தொப்பூர் சுங்கச்சாவடி பணிகளானது நடைபெற்று வந்தது. இந்த சுங்கச்சாவடி அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்தும் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சுங்கச்சாவடி
அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து
அதிமுக முன்னாள் அமைச்சரும்
பவானி சட்டமன்ற உறுப்பினருமான
கே.சி.கருப்பணன் தலைமையில்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவின்
பேரில் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர்
தலைமையில் முத்தரப்பு தரப்பில்
பேச்சுவார்த்தை நடைபெற்று அதன்
அறிக்கையை தாக்கல் செய்ய
நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி
பிரச்சினை தொடர்பான மாவட்ட
ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு
பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்
பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன், மற்றும்
அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள்
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
என பலரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் நிறைந்த பகுதிகள்
என்பதால் அப்பகுதியில் சுங்கச்சாவடி
அமைக்கக்கூடாது என முன்னாள்
அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.
குமார், பவானி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக