ஈரோடு ரெயில்நிலையத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை கே 2 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஜூலை 18) பிற்பகல் சுமார் 12 மணியளவில், குமாரபாளையத்தில் இருந்து ஏராளமான பயணிகளுடன், ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்தது. மூலப்பட்டறை நால்ரோட்டில் வளைவில் திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக பஸ் பழுதாகி நடுரோட்டில் நின்றது.
இதனால், பஸ்சை பின்தொடர்ந்து
வந்த மற்ற வாகனங்களும் சாலையில்
அணிவகுத்து நிற்க தொடங்கின.
இதனால், கே.என்.கே ரோடு, காவிரி
ரோடு, பஸ் ஸ்டாண்டு ரோடு, பவானி
ரோடு என நான்கு புறமும் வாகனங்கள்
செல்ல முடியாமல் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. அதேபோல், பஸ்ஸில்
இருந்த பயணிகள் பாதியிலேயே
இறக்கிவிடப்பட்டதால், வேறு
பேருந்திற்காக வெயிலில் காத்திருக்க
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பின், அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதேசமயம், பஸ் ஓட்டுநர், பொதுமக்களின் உதவியுடன் பஸ்ஸில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். பின், சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு பஸ்சை ஒருவழியாக சரிசெய்த ஓட்டுநர், அங்கிருந்து பஸ்சை ஓட்டிச்சென்றார்.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக