ஈரோடு ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

ஈரோடு ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்


ஈரோடு ரெயில் நிலையத்தில் நின்று, செல்லும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையிலும் ஈடுபடுகின்றனர். எனினும் சமீப காலமாக ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து அதன் பேரில் போலீசார் சோதனை செய்து கஞ்சாவை பறிமுதல் சய்ெது வருகின்றனர்.


இந்நிலையில், ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், ஈரோடு ரெயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, 2-வது நடைமேடை பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகில், கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. இந்த பையை யாரும் உரிமை கோராததால் போலீசார் அதை திறந்து பார்த்தனர். அதில், 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம சந்தானம் ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad