சாமந்தி பூக்களுக்கு சரியான விற்பனை விலை இல்லை. விவசாயிகள் வேதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

சாமந்தி பூக்களுக்கு சரியான விற்பனை விலை இல்லை. விவசாயிகள் வேதனை.



கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல ஏக்கரில் விவசாயிகள் சாமந்தி  பூக்கள் பயிரிட்டு வருகின்றனர். நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும் அவை நீண்ட கால பயிர் ஆகவும் விலை குறைவான விற்பனை என்பதாலும் குறுகிய காலப்பயிரான சாமந்தி பூக்கள் அவர்களுக்கு நம்பிக்கை தரும்படியாக இருக்கிறது. தினமும் பூக்கள் பறித்து விற்பனை செய்யலாம் என்பதால் அவர்கள் சாமந்திப்பூக்களை பயிரிடுவதை ஆர்வமாக செய்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் சாமந்திப் பூக்களுக்கு விலை என்பது அதிகபட்சமாக தற்போது கிலோவுக்கு 40 ரூபாய் மட்டுமே விற்பனை செய்வதாகவும் ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாயிலிருந்து, 100 ரூபாய் கிடைத்தால் சரியாக இருக்கும் எனவும் பயிர் பராமரிப்பு மற்றும் பூக்கள் பறிப்பதற்கான கூலி ஆட்கள் செலவு பூக்களை விற்பனை செய்வதற்கான நடைமுறை செலவு என அனைத்தும் சேர்த்து பார்த்தாலும் 40 ரூபாய் விலை என்பது உழைப்புக்கேற்ற விலையில்லை எனவும் விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். எப்போதும் நிலை இல்லாமல் விலை இருப்பதால் அதிக விளைச்சல் இருந்தும் சரியான லாபம் இல்லை என விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad