திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் புதிய தார் சாலை மறு தார்சாலை அமைக்கும் பணி பூமி பூஜை போடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டில் புதிய தார் சாலை மறு தார்சாலை அமைக்கும் பணி பூமி பூஜை போடப்பட்டது


திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் சூர்யா நகர் மற்றும் ஆத்துப்பாளையத்தில் இருந்து வெங்கமேடு செல்லும் வழியில் உள்ள எஸ் பி கே கார்டனின் எதிரில் உள்ள மண் சாலை பகுதிகளில் மாநில நிதிக்குழு 2025-26 திட்டத்தின் கீழ் சிப்பம் எண்.02 ன் கீழ் ரூ. 71.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் தளம்  மற்றும் மறு தார் தளம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்மண்டல தலைவர் திருமதி உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் பகுதி கழக செயலாளர் கொ.ராமதாஸ் மற்றும் வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி மற்றும் 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரேமலதா கோட்டா பாலு அவர்களும் அவரது கணவரும்  மாநகர அயலக அணி அமைப்பாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ஆகிய கோட்டா பாலு அவர்களும் 10 வது வார்டு செயலாளர் சசிகுமார் , பகுதி கழக  துணை செயலாளர் மணிமாறன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பார்த்திபன், காயத்ரி நகர் பாலு, மனோகரன், ரெட்டி,ரகுபதி,அய்யாச் சாமி, ராஜசேகர், செல்வம், நாகராஜ், மீனவரணி ஆறுச்சாமி, ரமேஷ், தண்டபாணி மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad