மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம்


திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம், புதிய உறுப்பினர் சேர்க்கை ஆகிய நிகழ்வுகள் திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மங்கலம் ஒன்றியத்தில் உள்ள அலுவலகத்தில் 

 தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டு நடைபெற்றது. 

மாநகர் மாவட்ட செயலாளர் செ.அபுதாஹீர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். 

மாநகர் மாவட்ட தலைவர் செல்லக்குமார்,

தெற்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம் கான், 

மங்களம் ஒன்றிய தலைவர் அலாவுதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் 

செ.இப்ராஹிம் பாதுஷா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து 

கொண்டு அனைவரையும் வாழ்த்தி, கழக வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களின் சட்டவிரோத கலெக்ஷன் டீம் குண்டர்களை களத்தில் சட்டத்தின் மூலமும் களப்போராட்டம் மூலமும், எதிர்கொள்ளக்கூடிய வழிமுறைகளை, நெறிமுறைகளை விளக்கமாக கூறி

சிறப்புரை ஆற்றினார்.

மேலும் 50 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையும்,

30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பொறுப்புகளும் வழங்கினார். 

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கழகத்தின் மாநில நிர்வாகிகள்,

 திருப்பூர் மாநகர் மாவட்டம், வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம்,

கொங்குநகர் பகுதி,

அவிநாசி ஒன்றியம், 

பூண்டி பகுதி, 

வீரபாண்டி பகுதி கழகம், 

புதுக்காடு பகுதி, 

பெரிய தோட்டம் கிளை, 

பழ வஞ்சிபாளையம் பகுதி,

ஹவுசிங் யூனிட் முதலிபாளையம் பகுதி, 

மங்களம் ஒன்றிய கழகம்,

சமூக செயற்பாட்டு பிரிவு நிர்வாகிகள்,

 இளைஞர் அணி நிர்வாகிகள்,

உள்ளிட்ட அனைத்து இடங்களின் நிர்வாகிகள்,

 தலைவர்கள்,

 செயலாளர்கள்,

 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இறுதியாக மஜமுக-வின்,

 கழக செய்தி தொடர்பாளர்,

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் செ.அபுதாஹீர் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார்.

தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad