வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு மகா மாரியம்மன் ஆடித்திருவிழா !
குடியாத்தம் , ஜூலை 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத பூ கரகதிருவிழா வெகு விமர் சையாக நடைபெற்றது . மூலவருக்கு வெண்ணையில் உலர் பழங்களாலான சிறப்பு அலங்காரம் ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத் தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக ஆடி மாதத்தில் பூ கரகம் அலங்கரித்து தீபராதனைகள் செய்த பின் மக்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் ஊர்வலம் வருவது வழக்கம் அதேபோல் இந்த
வருடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்ம னுக்கு கொடியேற்றத்துடன் காப்பு கட்டு தல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது அதனைத் தொடர்ந்து தினமும் மாலை யில் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் தீபாரதனை செய்து மக்கள் வழிபட்டு வந்தனர் அதனைத் தொடர்ந்து இன்று பூ கரகம் பல வகையான பூக்க ளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு பூஜை கள் செய்த பின் பூ கரகத்தை தலையில் சுமந்தவாறு பம்பை இசை முழங்க கோ விலை சுற்றி பூ கரகம் ஆடி வரும் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்ட னர் முன்னதாக மூலவர் மாரியம்மனுக்கு வெண்னையில் உலர் பழங்களால் ஆன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர் களுக்கு காட்சி அளித்தார் அதேபோல் உற்சவர் ஊஞ்சல் சேவையும் நடைபெற் றது இதில் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள மக்களும் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக