ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஓன்றியம் சேதுகரை கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதற்கு அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர்.இதனால் இங்கு குப்பை அதிகமாக சேர்ந்து மாசு ஏற்படுகிறது, இப் பகுதியில் திருப்புலாணி ஊராட்சி ஒன்றியம், ஆனந்தம் சில்க்ஸ் நிறுவன ஊழியர்கள் இணைந்து தூய்மை பணியை செய்து வந்தனர்.
தற்போது கடற்கரை பகுதிகளின் தூய்மை பணிசெய்வதற்கான ரூபாய் 5.50 லட்சம் மதிப்பிலான இயந்திரத்தை பிரபல ஜவுளிகடை நிறுவனமான ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் சார்பாக 5.50 லட்சம் மதிப்பிலான தூய்மை படுத்தும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் இடத்தில் வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு ஆனந்தா சில்க்ஸ் நிறுவன உரிமையாளர் வடிவேல் 3ie,பவுண்டேஷன நல்லமுத்து, ஏசியன் கிளாஸ் ஹவுஸ் முஜிபுர், சந்திரசூடன், மதி ரகு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி,கோட்டை இளங்கோவன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் முனியராஜ் மன்சூர் தாஸ் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக