அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே.விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணியம் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் பல்லடம் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாய தியாகிகள் A.R.சுப்பையன் மற்றும் N.முத்து குமாரசாமி ஆகியோரின் 53 ஆம் ஆண்டு நினைவு தினம் மற்றும் 1970 முதல் 1980 ஆம் ஆண்டு வரை துப்பாக்கி சூட்டில் உயர்நீத்த அனைத்து விவசாய தியாகிகளின் தியாகத்தை போற்றும் விதமாக வரும் ஜூலை 5-7-2025 உழவர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது நமது நிறுவன தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் பல்லடம் கே.அய்யம்பாளையம் நினைவு ஸ்தூபிக்கு சங்க தலைமை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று அஞ்சலி செலுத்த உள்ளோம் எனவே அனைத்து மாநில மாநகர மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நகராட்சி வார்டு கிளை நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் மேலும் நிர்வாகிகள் தங்கள் பகுதி கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்திற்கு கலந்து கொள்பவர்கள் பற்றிய விவரங்களை தயார் செய்து தலைமையிடம் முன்கூட்டியே தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக