ஊட்டி ஏடிசி பஸ் நிலையம் முதல் மத்திய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு.
உதகை எட்டின்ஸ் சாலையில் குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது இதன் முன்பாக அங்கு பழைய பொருட்கள் வாங்கிய விற்கும் கடைகாரர்கள் அவர்களின் குப்பை மூட்டைகளை அதற்கு முன்பாக போட்டு வைத்துள்ளார்கள் அங்கு சாக்கடை நீர் தேங்கி நகராட்சி ஊழியர்கள் அதை சுத்தப்படுத்த சிரமம் ஏற்படுகிறது ஏனென்றால் அங்கு ஓடாத பல நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார்கள் இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள் அங்கு அவர்களால் சுத்தப்படுத்த இயலவில்லை சாக்கடை நீர் தேங்கி சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் பழைய பொருட்கள் விற்கும் கடைகாரர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் ஏற்கனவே இந்த புகார் சம்பத்தபட்ட துறைக்கு தெரியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை செய்தியாளர் ராஜேஷ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக