காளையார் கோவிலில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இந்திய செஞ்சிலுவை சங்கம், மிதிவண்டி கழகம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஸ்ரீ சரஸ்வதி விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சரஸ்வதி விகாஸ் வித்யாலயா பள்ளியின் தாளாளர் சேகர், ஸ்டாலின், ரவீந்திரன், லெனின், ஜீவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் முனைவர் கோபிநாத், காளையார்கோவில் கிளைத் தலைவர் பள்ளியின் முதல்வர் வீரபாண்டி, விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு தலைவர் பக்கீர் முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்புரையாற்றினார்.
மேலும் மாஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜா, விளையாட்டு மையங்களின் கூட்டமைப்பு செயலாளர் முனைவர் சூசை ஆரோக்கிய மலர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன், சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட துணை செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இரத்த மையம் அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக இரத்த மைய மருத்துவ அலுவலர் டாக்டர் சித்து ஹரி, காளையார்கோவில் மூத்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாபா ரத்த மைய மருத்துவ ஆலோசகர் சூசைராஜா, டாக்டர் பாலமுரளி குமார் ஆகியோர் இரத்ததான முகாமை சிறப்பாக வழங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையார்கோவில் கிளைச் செயலாளர் அலெக்ஸாண்டர் துரை நன்றியுரையாற்றினார்.
இம்முகாமில் 40 க்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர்கள் தங்கள் இரத்தத்தை கொடுத்து மகிழ்ந்து சென்றனர். அவர்களுக்கு உடனடி பழச்சாறும், சான்றிதழ்களும், புத்தகங்களும் மற்றும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரத்த தானம் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் இம்முகாமிற்கான சிறப்பான முன்னேற்பாட்டினை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக