கோவையில் நாளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பரப்புரையையொட்டி அதிமுக MLA-கள் ஆய்வு!!!
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில்இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை ஜூலை 7ஆம் தேதி துவங்குகிறார். அன்றைய தினம் மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து எட்டாம் தேதி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் நடைபெறும் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, எம்எல்ஏ ,மேட்டுப்பாளையம் எம்எல்ஏ. ஏகே செல்வராஜ், கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அருண்குமார் ,உட்பட கட்சி நிர்வாகிகள் ,கிளை செயலாளர்கள், உள்ளிட்ட ஆய்வு செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக