உலக காகிதப் பை தினத்தை முன்னிட்டு கிரசன்ட்பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி!
உதகை அருகே உள்ள கிரசன்ட்பள்ளி பள்ளியில் உலக காகிதப் பை தினத்தை (World Paper Bag Day) முன்னிட்டு மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளைக் கூறி, அதன் மாற்றாக பேப்பர் பைகளை உபயோகிப்போம் என்ற முழக்கத்துடன் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் செயல்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் சுயமாக பேப்பர் பைகள் தயாரித்து, பள்ளிக்குள் மற்றும் பள்ளிக்கு அருகிலுள்ள கடைகளில் அவற்றை வழங்கினர். பசுமை உணர்வை மக்கள் மத்தியில் பரப்பும் விதமாக துணிகரமாகக் காணப்பட்ட இந்த முயற்சி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே பாராட்டைப் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பேசியபோது, “பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை. மாணவர்கள் எடுத்திருக்கும் இந்த சிறந்த முயற்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தனர்.
உலக காகிதப் பை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி மட்டுமல்லாது, சமுதாயத்துக்கும் ஒரு பசுமை சிந்தனையை விதைத்துள்ளது.
கிரசன்ட் மாணவர்கள் எடுத்துள்ள இந்த முன்முயற்சி, மற்ற பள்ளிகளுக்கும் ஒரு விழிப்புணர்வு முன்னோடியாக விளங்குகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக