மகிழ் அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்!
குடியாத்தம் , ஜூலை 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மகிழ்அறக் கட்டளை சார்பாக அரசுப் பள்ளியில்அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவி களுக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மகிழ் அறக்கட்டளை சார்பாக பிச்சனூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாணாக்கர்க ளுக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி நடை நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சு.சுபலட்சுமி மற்றும் போக்கு வரத்து காவல் ஆய்வாளர்T.முகேஷ்குமார் இருவரும் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களு க்கு எடுத்துரைத்தனர். அறக்கட்டளை உறுப்பினர் C.மணிமாறன், மற்றும் B.யுவன் சங்கர் அவர்கள் சிறப்புரையாற் றினார்கள், அறக்கட்டளை தலைவர் T.பொன்னரசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார், நிர்வாகிகள்: P.பார்த்திபன், மற்றும் K.மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள், மற்றும் உறுப்பினர்கள் P.S.மணிகண்டன், M.ஜெய்குமார்,K.மோகன், K.முருகன் K.சங்கர், M.புகழரசன் அனைவரும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக