கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நத்தமேடு கிராமத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்தார் சந்திரா (62) என்ற வயதான பெண்மணி. இவர் தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் மாயமான நிலையில்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம்
என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சந்திரா அணிந்திருந்த இரண்டரை பவுன் நகைகளை பறித்துச் சென்றதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் என இரண்டு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உடலை கைப்பற்றி பிரேதப் பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சந்திரா கொலை செய்யப்பட்டு நகைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக