ஸ்ரீமுஷ்ணம் அருகே நடவு செய்து மானிய தொகை விண்ணப்பங்கள் வேளாண்மை துறை கிடப்பில் போடப்பட்டு நேற்றைய தினம் ஒரே நாளில் திரண்ட விவசாயிகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

ஸ்ரீமுஷ்ணம் அருகே நடவு செய்து மானிய தொகை விண்ணப்பங்கள் வேளாண்மை துறை கிடப்பில் போடப்பட்டு நேற்றைய தினம் ஒரே நாளில் திரண்ட விவசாயிகள்

 கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சாலை நடவு செய்த விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அனைத்து விவசாயிகளும் அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட வேளாண் அலுவலர்களை அணுகி அதற்கான விண்ணப்பத்தை அளித்து முடித்துவிட்ட நிலையில் ஸ்ரீமுஷ்ணம் வேளாண்துறை அலுவலகத்தில் மட்டும் இந்த விண்ணப்பங்கள் பெறப்படாமல் 

கிடப்பில் போடப்பட்டுள்ளது அதனை நேற்று விண்ணப்பங்கள் பெறப்படும் என விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டு அனைத்து விவசாயிகளும்  ஒரே நாளில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் கூடியிருக்கின்றார்கள் இந்த விண்ணப்பங்களை அறிவிப்பு வந்த உடனே பெறப்படாமல் கிடப்பில் போடப்பட்டு தற்பொழுது விவசாயிகளை இன்னல்களுக்கும் பெரும் அலைச்சலுக்கும் ஆளாக்கி இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் வேளாண் துறை அலுவலகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்

 தமிழககுரல் இணையதள செய்தி பிரிவு கடலூர் மாவட்ட செய்தியாளர் 
P ஜெகதீசன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad