குன்னூரில் பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் டாஸ்மாக் கடை அகற்றபடும் நகராட்சி துணைத் தலைவர் வாசிம்ராஜா உறுதி!
“மாணவர்கள் பாதையில் மது கடை வேண்டாம்” –உறுப்பினர்களும் ஒருமனதாக எதிர்ப்பு
நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மது விற்பனை கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி துணைத் தலைவர் வாசிம்ராஜாஉறுதி அளித்துள்ளார்
இந்த முடிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார்,குருமூர்த்தியின் வலியுறுத்தல்
இன்று நடைபெற்ற குன்னூர் நகராட்சியின் மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் சரவணகுமார் மற்றும் குருமூர்த்தி பேசும் போது மாணவ, மாணவிகள் அதிக அளவில் அந்த வழியாக செல்லும் நிலையில், மது கடையின் ஈர்ப்பு அவர்களின் மனநிலை மற்றும் கல்விச் சூழலுக்கு தீங்காக இருக்கிறது” என கடும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இது போன்ற முக்கியக் கோரிக்கைகள் மீது நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.
துணைத் தலைவர் வாசிம்ராஜா உறுதியுடன் பதிலளிப்பு:
இதனைத் தொடர்ந்து, நகராட்சி துணைத் தலைவர் வாசிம்ராஜா பங்கேற்ற பதிலளிக்கையில்,
“நகரமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நான் முழுமையாக ஏற்கிறேன். மாணவர்கள் பாதையில் டாஸ்மாக் கடை இயங்கக்கூடாது. நகராட்சியின் சார்பில் அவ்விடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி பூர்வமாக அறிவித்தார்.
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டு:
உறுப்பினர்கள் , நகராட்சி துணைத் தலைவர் உத்தரவும் ஒரே கோட்டில் நிலைபெற்றதையடுத்து,
“இது மக்களிடம் இருந்து எழுந்த உண்மையான கோரிக்கை. மாணவர்களின் நலனுக்காக நகராட்சி எடுத்துள்ள இந்த முடிவை நாம் பாராட்ட வேண்டும்”
என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி பாதையில் மாணவர்களின் மனநலத்தையும், சமூக ஒழுங்கையும் காப்பதற்காக, நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள இந்த தீர்மானம், மற்ற நகராட்சிகளுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையும்.
“மக்கள் குரலை அரசு கேட்கும் போது தான் மாற்றம் நிகழும்” என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிபடுத்துகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக