சிறு குறு தேயிலை விவசாயிகளுக்கு மானியம் கேட்டு முதல்வருக்கு மனு
தேயிலை விவசாயிகள் - விலை குறைவாக உள்ளதாலும் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும், சிறு குறு விவசாயிகள் மேற்படி வருவாய் இழப்பு ஏற்பட்டுவரும் காலமான 4 மாதங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்பேத்கார் மக்கள் இயக்க பந்தலூர் நகர செயலாளர் இந்திரஜித் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் சிறுகுறு விவசாயிகள் அதிகமாக தேயிலையை முக்கிய ஆதாரமாக விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது கூடலூர் பந்தலூர் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக தேயிலை விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பசுந்தேயிலையின் மாதாந்திர விலையும் மிக குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் தேயிலை விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இயலாத சூழல் உருவாகி உள்ளது. அன்றாட குடும்பச் செலவினங்களுக்கு மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகுவதோடு தேயிலை தோட்டங்களை பராமரிக்க இயலாமலும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் அரசு மூலம் குழு அமைத்து நிர்ணயம் செய்யக்கூடிய விலை குறைவாக இருந்தாலும் அந்த விலையை விட சுமார் இரண்டு ரூபாய் வரை குறைவாகவே சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு சென்று சேருகிறது. இதனை உறுதிபடுத்தி நிர்ணயம் செய்யும் விலை வழங்க எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும் அரசினுடைய கூட்டுறவு நிறுவனம் மூலம் தேயிலை கொள்முதல் செய்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் அமைத்து தேயிலை தூள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தேயிலை நிறுவனம் ஒவ்வொரு முறையும் பசுந்தேயிலை வழங்கும் விவசாயிகளுக்கு வழங்க கூடிய ஆதார விலை சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னரே வழங்கப்படுவதால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நம்பி இருக்கக்கூடிய சிறுகுறு விவசாயிகள் மிகப்பெரும் அளவில் பாதிக்கப்படுவதோடு வருவாய் இழந்து காணப்படுகின்றனர். அரசு தேயிலை கூட்டுறவு நிறுவனத்தில் முறையான விலை வழங்காத காரணத்தினால் தனியார் தேயிலை கொள்முதல் செய்யும் நிறுவனங்களும் மிகக்குறைந்த விலையையே தேயிலை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. எனவே சிறு குறு தேயிலை விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தங்களுடைய வாழ்வாதாரத்திற்கும் இருக்கும் தேயிலைத் தோட்டத்தை பராமரிக்கும் பணிக்கும் வெவ்வேறு இடங்களில் கடன் வாங்கி சிரமப்படும் சூழலில் சிக்கி உளளனர். தற்போதைய மழைக்காலத்தினால் சுமார் 4 மாதங்களுக்கு தேயிலை விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு வரும் என்பதும் குறிப்பிடதக்கது
தற்போதைய தேயிலை விவசாயத்தை முழுமையாக நம்பி இருக்கும் சிறுகுறி வேலை விவசாயிகள் எதிர்கொள்ளும் விவசாய பாதிப்புகளுக்கு அரசு சார்பில் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 5,000 என நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். மேலும் மேற்படி தேயிலை விலை நிர்ணய குழு சார்பில் நிர்ணயிக்கும் விலை போதியதாக இல்லாத சூழல் தான் உள்ளது. விவசாயிகளுக்கு கிடைக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றி தந்து உதவுமாறு நீலகிரி மாவட்ட சிறு குறு விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம் என கூறியுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக