வாழ்க்கையில் முன்னேறலாம் குறிப்பேடு வழங்கும் விழாவில் சிவராஜ ஞானாச் சாரிய குருசுவாமிகள்அருளுரை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 ஜூலை, 2025

வாழ்க்கையில் முன்னேறலாம் குறிப்பேடு வழங்கும் விழாவில் சிவராஜ ஞானாச் சாரிய குருசுவாமிகள்அருளுரை!

வாழ்க்கையில் முன்னேறலாம் குறிப்பேடு வழங்கும் விழாவில்  சிவராஜ ஞானாச் சாரிய குருசுவாமிகள்அருளுரை!

வேலூர் , ஜுலை 27 -

தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்  குறிப்பேடு வழங்கும் விழாவில்  சிவராஜ ஞானாச்சாரிய குருசுவாமிகள் அருளுரை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தன்நம்பிக் கையுடன் விடாமுயற்சியோடு படித்தால் வாழ்வில் முன்னேறலாம் குடியாத்தம் ஸ்ரீ காளிகாம்பாள் கல்வி அறக்கட்டளையின் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு இல வச குறிப்பேடு வழங்கும் விழாவில் விஸ் வகர்ம ஜெகத்குரு சீனந்தல் மடலாயத் தின்  65வது மடாதிபதி சிவராஜ ஞானாச் சாரிய குருசுவாமிகள் பேசினார்.
குடியத்தாம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் அமைந்து அரசுப்பள்ளி மாணவ மாணவி களுக்கு குறிப்பேடுகள் வழங்கும் விழா  ஞாயிற்றுகிழமை இன்று காலை 10 மணி அளவில் ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் உள்ளி மண்டபத்தில்  நடைபெற்றது. 
விழாவிற்கு காட்பாடி வட்டாட்சியர் சமூக நல பாதுகாப்பு திட்டம் எஸ்.லலிதா தலை மை தாங்கினார்.  விஸ்வகர்ம நகைத் தொழிலாளர் நல அறக்கட்டளையின் கௌரவ தலைவர் வி.பி.மோகனவேல்,   அபிராமி அறிவியல் கலைக்கல்லூரி குழுமத்தின் செயலாளர் எம்.என்.ஜோதி குமார்,  நல்லாசிரியர் புலவர் சண்முக செங்கல்வராயன்  ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.முன்னதாக நிர்வாகத் தலைவர் கே.பாஸ்கர் ஆச்சாரி வரவேற்று பேசினார்.மாணவ மாணவிகளுக்குகுறிப் பேடுகளை வழங்கி அகில பாரத விஸ்வ கர்ம ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஶ்ரீ சிவ.சிவராஜ ஞானச்சாரிய குருஸ்வாமிகள் மாணவர் களை பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறியதாவது மாணவர்கள் தினந் தோறும் படிக்க வேண்டும், படித்ததை நினைவு கூற வேண்டும், தன்னம்பிக் கையுடன் விடாமுயற்சியோடு படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற் காகவே காளிகாம்பாள் அறக்கட்டளை  குறிப்பேடுகளை வழங்கி சிறப்பிக்கி ன்றனர்.  மாணவர்கள் ஊக்கத்துடன் படித்து தங்களை பலப்படுத்திக் கொண்டு இந்த நாட்டையும் வளப்படுத்த வேண்டும் மாணவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும்.  மாணவர்களின் கடமை என்ன? பொருள் புரிந்து படிக்க வேண்டும்.  இங்கே எனக்கு பின்புறம் ஒருவர் உள்ளார் அவருக்கு 50 வயது இவர் தினமும் 300கிராம் உணவு சாப்பிடு கிறார் என்றார் ஒரு மாதத்திற்கு என்றார் 300x30= 9000கிராம் அதாவது 9கிலோ ஒருவருடத்திற்கு என்றார் 9x356= 3285 கிலோ இதனை 50 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் 1இலட்சத்து 64 ஆயிரத்து 250கிலோ இதனை இவர் ஒரே நாளில் சாப்பிடவில்லை சாப்பிடவும் முடியாது.   இது போல ஒருவேளைக்கான உணவை சாப்பிடாமல் அடுத்த வேளைக்கு சேர்த்து சாப்பிட முடியாதோ அது போல மாணவர் களாகிய நீங்கள் சேர்த்து வைத்து படிப் பது முடியாது எனவே நீங்கள் தினமும் படிக்க வேண்டும் நாளை படிக்கலாம் என இருக்க கூடாது என்றார்.தமிழ்நாடு விஸ் வகர்ம நண்பர்கள் நல சங்கத்தின் செய லாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன்,  ஆலயத்தின் பரம் பரை அறங்காவலர் இ.அருணாச் சலம்,  தாயுமானவர் முதியோர் இல்ல தலைவர் டாக்டர் பி.ஆனந்தி தங்கவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்.லோகநாதன் ஆச்சாரி, ஆர்.ராஜேந்திரன் ஆச்சாரி, ஆர்.சுந்தர் ஆச்சாரி,  துணைத்தலைவர்கள் எம்.ஜெக நாதன், என்.குப்பன், பொருளாளர் எம்.வெங்கடேசன், ஜே.பி.வசந்தன், எஸ். முருகேசன், சபரீசன், வி.வாணிவிஸ் வநாத், எம்.விஜயகுமார், என்.பிரகாஷ், எம்.மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சியில் குடியா த்தம் நகரம் மற்றும் வட்டாரத்தைச் சேர் ந்த ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவி கள் 750 பேருக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது. முடிவில் பொருளாளர் என்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad