ஆப்பிரிக்கா கண்டம், ஜாம்பியா நாட்டின், எடன் பர்க் பல்கலையைக்கழகத்துடன் தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஜூலை, 2025

ஆப்பிரிக்கா கண்டம், ஜாம்பியா நாட்டின், எடன் பர்க் பல்கலையைக்கழகத்துடன் தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஆப்பிரிக்கா கண்டம், ஜாம்பியா நாட்டின், எடன் பர்க் பல்கலையைக்கழகத்துடன் தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்.


02.07.2025 க. க. சாவடி, கோவை தானிஷ் அஹ்மது தொழில் நுட்பக் கல்லூரியும், ஆப்பிரிக்கா கண்டம், ஜாம்பியா நாட்டின் எடன் பர்க் பல்கலையைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிர்வாக இயக்குநர் திரு. கே. ஏ. அக்பர் பாஷா, தலைமை நிர்வாக செயல் அதிகாரி திரு.ஏ. தமிஸ் அஹமது,  எடன் பர்க் பல்கலைகழக ஆராய்ச்சி மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சம்ஸன், பல்கலைகழக பதிவாளர் முனைவர் எஸ். ராமசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் கே .ஜி. பார்த்திபன் செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் முனைவர் எஸ். முத்துவேல் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.


இவ் ஒப்பந்தத்தின் வாயிலாக கல்லூரி பேராசிரியர்களின் ஆராய்ச்சி திறன் மேம்பாடு, இணைய பயிலரங்கம், மாணவ - மாணவியர்களுக்கு புதிய தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வகுப்புகள், முதுநிலை கல்வி பெற கல்வி ஊக்கத்தொகை போன்ற பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட இருக்கிறது .


இந்நிகழ்விற்கு கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad