கோரத்தாங்கல் கிராமத்தை பாதிக்கும் ரயில்வே சுரங்கப்பாதை மூடல் பொது மக்கள் போராட்டம்!
காட்பாடி , ஜுலை 29 -
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து கோரத்தாங்கல் கிராமத்திற்கு பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப்பாதையை மூடும் பணி யை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து கோரத்தா ங்கல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சுரங்கப் பாதை மூடப்படுவதால், தற்போது நேரடியாக செல்லக்கூடிய பாதை இல்லா மல், சுமார் ஏழு கிலோமீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்ப டலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பள்ளி மாணவர்கள், வேலைக் குச் செல்லும் மக்கள், மற்றும் விவசாயி கள் உள்ளிட்ட அனைவரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறுகி ன்றனர்.பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளதாவது,இந்த சுரங்கப்பாதையை மூடுவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.சுரங்கம் மூடப்படுவதை தவிர் க்க, பொதுமக்கள் பயணத்துக்கு பாதிப் பில்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ள வேண்டும்.அரசும், ரயில்வே நிர்வாகமும் எங்கள் குரலைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கிராம மக்கள் வலியுறுத்து கிறார்கள்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக