மானாமதுரை மற்றும் திருப்புவனத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிய அமைச்சர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

மானாமதுரை மற்றும் திருப்புவனத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிய அமைச்சர்


மானாமதுரை மற்றும் திருப்புவனத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிய அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 185.90  லட்சம் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கலை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் நாட்டினார்.


அதனைத் தொடர்ந்து மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் பேரூராட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் ரூபாய் 215 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கலையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நாட்டினார்.


இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி செல்வசுரபி, மாவட்ட பதிவாளர் திரு ரமேஷ், வருவாய் கோட்டாட்சியர் திரு. விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் கழகச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தர், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துச்சாமி, திருப்புவனம் பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், திருப்புவனம் நகரக் கழகச் செயலாளர் நாகூர் கனி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், பேரூர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad