கூடலூர் அருகே ஆருட்டுப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் மகளிர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆல் தி சில்ட்ரன் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) நாகலிங்கம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் முருகேசன், ஆசிரியர் மேரி மரியன்னை நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர்கள் ஜெனிவாசன், ஜெயந்தி நடராஜன் ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் சுருதி ஷோபனா வரவேற்றார். ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆல்பர்ட் பேசும்போது மாணவிகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தின் முதல்படியாக கைகழுவுதல் அவசியம். காலைகடன் கழித்த பின், உணவு அருந்தும் முன், இதர பணிகள் முடிந்த பின் என முறையாக 6 படிநிலைகளை கருத்தில் கொண்டு கைகழுவ வேண்டும். ஆடைகள் சோப்பு போட்டு துவைத்து நன்கு காய்ந்தபின் பயன்படுத்த வேண்டும் என்றார்.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது உடல் ஆரோக்கியத்தில் உணவு பழக்கம் அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உணவு நன்றாக மென்று விழுங்கும் பழக்கம் அவசியம். விரைவு உணவுகள், நொறுக்கு தீனிகள், பழரசங்கள், ஊட்டச்சத்து பானம் என விளம்பர படுத்தும் பானங்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.
சுகாதார நிலைய பகுதி செவிலியர் செல்வி பேசும்போது மாணவிகள் அதிகம் இரத்த சோகையால் பாதிக்க படுகின்றனர். அதனால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் மாணவ பருவத்தில் அக்கறை எடுத்துகொள்ளாத பட்சத்தில் பிற்காலத்தில் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றார்.
நிகழ்ச்சியில் செவிலியர்கள் ஆஷா பணியாளர்கள் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக