மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வருக்கி கம்பெனியால் நோய் தொற்று பரவும் அபாயம் என பொதுமக்கள் கோவை கலெக்டரிடம் மனு! !!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்று வழங்கினர். அதில் சமயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான வருக்கி கம்பெனி திறந்தவெளியில் ஐந்திற்கும் மேற்பட்டபாய்லர்கள் அமைத்து தினமும் விறகு போட்டு எரிப்பதால்சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகை மூட்டத்தால் மூச்சு திணறல்,நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இவர்கள் வருக்கி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களை பாலித்தீன் கவர்களை வெளியிலேயே வீசி விடுகிறார்கள் அதை சாப்பிடும் கால்நடைகள் உயிரிழந்து விடுகின்றன.மற்றும் உடல் உபாதைகள் பாதிக்கப்படுகின்றன. நான்கு ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனம் உரிமையாளர்களிடம் எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் அவர்கள் தொடர்ந்து இடத்தை மாற்றுகிறோம் என்று சொல்லியே காலம் தாழ்ந்து வருகிறார் .என்று அப்பகுதி மக்கள் மனு ஒன்றை வழங்கி உள்ளனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக