ஊட்டி நகரில் சாலைகளில் குவி்ந்துள்ள குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் மாசு ஏற்படுத்துவற்றை உண்ணும் கால்நடைகள் சுகாதாரசீர்கேடு என பொதுமக்கள் கவலை
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரத்தில் சாலைகளில் வைக்கபட்டு இருந்த குப்பை தொட்டிகள் அனைத்தும் அகற்றபட்டு உள்ளது
நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் முறையாக குப்பைத் தொட்டியில் இல்லாததால் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் முறையான குப்பைத்தொட்டி வசதி இல்லாததால் சாலை ஓரங்களில் குப்பைகள் ஏறியப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பைகளை அகற்ற மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனி தனியாக தரம் பிரித்து குப்பை வண்டிகளில் வழங்கப்படுகிறது.
இதனிடையே குப்பை வண்டி வரும் நேரம் தெரியாமலும் முறையான குப்பை தொட்டி வசதி இல்லாததாலும் அப்பகுதி பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்
ஊட்டி.நகரில் குப்பை தொட்டிகள் இல்லாததால் குப்பைகளை சாலையில் வீசப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சாலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளோடு உள்ள குப்பைகளை கால்நடைகள் உண்ணும் நிலையும் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சாலைகளில் குவீயும் குப்பைகள் உரிய முறையில் கழிவுகள் அகற்றப்படாததுடன், பிளாஸ்டிக் மற்றும் வேதியியல் கழிவுகள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் குறிப்பாக, தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரியும் மாடுகள், கழுதைகள், சில நேரங்களில் நாய்கள் கூட இந்தக் கழிவுகளில் இருந்து உணவுகளைத் தேடிக்கொண்டும், பல்வேறு பொருட்களை தின்றும் வருகின்றன.
இதனால், பிளாஸ்டிக் மூடிய உணவுப் பாக்கிகள், அலுமினியம் மற்றும் பிற நச்சுத்தன்மை உள்ள பொருட்களை உட்கொள்ளும் கால்நடைகளுக்கு பலவிதமான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக, மஜ்படாமல் குடல் அடைப்பு, சிரமமான மலம் கழிப்பு, மற்றும் சில நேரங்களில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுமக்களின் எதிர்வினை:
• “தினமும் காலையில் குப்பை தொட்டிகளுக்கு அருகில் மூன்று நான்கு மாடுகள் பிளாஸ்டிக் மூடிய உணவுகளை அசைப்பதை பார்க்கிறோம். இது தாங்க முடியாத நிலை” என ஒரு கடை உரிமையாளர் கூறினார்.
• “நகராட்சி குப்பை அகற்றும் பணியில் அலட்சியம் காட்டுவது இது போன்ற நிலைக்கு காரணம்” என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அகற்ற பட்ட குப்பைத் தொட்டிகளை அடைக்கக்கூடிய வகையில் அமைக்க வேண்டும்
பொதுமக்கள், கடைகள் உணவகங்கள் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் உணவுப் பொருட்களை திறந்தவெளியில் போடப்படாமல் இருக்க வேண்டும் என்பது தற்போதைய அவசியமாகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக